மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜன 2022

தலைநகரில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

தலைநகரில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

தலைநகர் டெல்லியில் இன்று காலை காசிபூர் மலர் சந்தையில் வெடிகுண்டு பை கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி காசிபூர் மலர் சந்தையில் ஆயிரக்கணக்கில் கடைகள் உள்ளன. தினந்தோறும், வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடமாகும்.

வழக்கம்போல் இன்று சந்தையில் வியாபாரம் நடைபெற்று கொண்டிருந்தது. இந்த நிலையில் காலை 9.30 மணியளவில் ஒரு பூக்கடைக்கு அருகில் ஒரு ஸ்கூட்டியும், அதனுடன் ஒரு பையும் இருப்பதை பார்த்த வியாபாரிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

உடனே அந்த வியாபாரி, மர்ம பை குறித்து போலீசுக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவினர், வெடிகுண்டு நிபுணர்கள் பையில் வெடிகுண்டு இருப்பதை உறுதிசெய்தனர். பின்பு, ஆளில்லா இடத்திற்கு கொண்டு சென்று, குழி தோண்டி வெடிகுண்டை அதில் போட்டனர். சிறிது நேரத்தில் காதை கிழிக்கும்படி அந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா கூறுகையில்,”டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச எல்லைக்கு அருகே உள்ள காசிபூர் சந்தையில் 3 கிலோ எடை கொண்ட மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு(IED) கண்டுபிடிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டை செயல் இழக்க செய்தனர். ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பயங்கரவாத முயற்சியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.

இந்த வெடிகுண்டு சம்பவத்துக்கும், அண்டை மாநிலமான உ.பியில் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடக்கும் தேர்தலுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

வெள்ளி 14 ஜன 2022