மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜன 2022

வீட்டு தனிமை: சுகாதாரச் செயலாளர் அறிவுறுத்தல்!

வீட்டு தனிமை: சுகாதாரச் செயலாளர் அறிவுறுத்தல்!

தமிழ்நாட்டில் நேற்று முன் தினம் 17,934 பெர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இந்த எண்ணிக்கை 20,911 ஆக உயர்ந்தது. இதனால், நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் இருப்போர்களின் எண்ணிக்கை 1,03,610 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், பெரும்பாலானவர்களுக்கு லேசான பாதிப்பு மட்டுமே உள்ளது. அதனால் லேசான பாதிப்பு உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இல்லாதவர்கள், கொரோனா சிகிச்சை மையங்களில் சேர்ந்து கொள்ளலாம் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா அதிகரிப்பு மற்றும் வீட்டுத் தனிமை குறித்து தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அதில்,” இந்த அலையில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதை நாம் அனைவரும் உறுதி செய்திட வேண்டும். தொற்று நோய் பரவாமல் தடுப்பதில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

முகக்கவசம், சமூக இடைவெளி மற்றும் கைகளை கழுவுதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் நெரிசலான இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். தொற்று உறுதியாகும் நபர்கள் தொடர்புடைய இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

கொரோனா தொற்றைக் கண்டறிய யாரை பரிசோதிக்க வேண்டும், யாரை பரிசோதிக்கக்கூடாது என்பதற்கான ஐசிஎம்ஆர் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். இது மருத்துவ அமைப்புகளிலும் பொருந்தும். தகுதியான அனைவரையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்குவிக்க வேண்டும்.

அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சி மூலம் மட்டுமே அதிகரித்து வரும் தொற்றைக் குறைக்க முடியும். அவ்வப்போது பெறப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொற்று பரவலைத் தடுக்கும் முயற்சியில் முழுமையாக மக்களையும் ஈடுபடுத்த வேண்டும்.

குறிப்பாக, மருத்துவரின் அறிகுறியுடன் மட்டுமே மருந்துகளை எடுத்துகொள்ள வேண்டும். கூகுள் மருத்துவர்களாக யாரும் மாற வேண்டாம். உரிய மருத்துவ பரிசோதனை இல்லாமல் கொரோனா பாதித்தவரை வீட்டு தனிமைக்கு அனுமதிக்கக் கூடாது. அனைத்து மாவட்டங்களிலும் கோவிட் கேர் சென்டரை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வெள்ளி 14 ஜன 2022