மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜன 2022

காவலர்களின் சமத்துவ பொங்கல்!

காவலர்களின் சமத்துவ பொங்கல்!

தமிழ்நாடு முழுவதும் இன்று தை முதல் நாளில் பொங்கல் பண்டிகையை ஒவ்வொரு மக்களும் சிறப்பான முறையில் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வரிசையில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இன்று சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு கலர் என்ற வகையில் காவலர்கள் பாரம்பரியமான வேட்டி, சேலை அணிந்து பொங்கலை சிறப்பான முறையில் கொண்டாடினர்.

கோவை, மேட்டுப்பாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில் காவல்துறையினர், காவல்நிலைய வளாகத்தில் காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, புதுப்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

அதுபோன்று சேலம் நெத்திமேடு பகுதியில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோடா தலைமையில் துணை ஆணையாளர்,உதவி ஆணையாளர்கள் காவல் ஆய்வாளர்கள் உட்பட அனைத்து காவலர்களும் பாரம்பரிய உடை அணிந்து, பொங்கல் வைத்து குடும்பத்துடன் சிறப்பாக பண்டிகையை கொண்டாடினர்.

அதனுடன், தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான உறியடித்தல், கயிறு இழுத்தல், கோலப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

வணங்காமுடி

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

வெள்ளி 14 ஜன 2022