மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜன 2022

பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது?

பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது?

வரும் நிதியாண்டுக்கான (2022- 2023) மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கவுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடருக்கான ஆலோசனைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கொண்டு வருகிறார். கடந்த டிசம்பர் 30ஆம் தேதி மாநில நிதியமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் நாட்டில் கொரோனா வேகம் அதிகரித்துள்ளதால் 400க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயத்தில் பொதுமக்கள், வணிகர்கள், தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மத்தியில் பட்ஜெட் தொடர்பான எதிர்ப்பார்ப்பும் நிலவி வருகிறது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி நிறைவடையும் என்று நாடாளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 31 அன்று குடியரசுத் தலைவர் உரையாற்றும் நிலையில், பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 11ஆம் தேதி நிறைவடையும். ஒரு மாத கால இடைவேளைக்குப் பிறகு, அமர்வின் இரண்டாம் பகுதி மார்ச் 14 முதல் தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி முடிவடையும் என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

வெள்ளி 14 ஜன 2022