மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜன 2022

அடுத்த பொங்கலுக்கு அமைச்சர்களாக வருவோம்: திமுக எம்.எல்.ஏ.க்கள்!

அடுத்த பொங்கலுக்கு அமைச்சர்களாக வருவோம்: திமுக எம்.எல்.ஏ.க்கள்!

தமிழர் திருநாளான பொங்கல் விழாவை கொண்டாடிய புதுச்சேரி துணை நிலை ஆளுநர், எம்எல்ஏ மற்றும் அமைச்சர்களுக்கு பொங்கல் பானைகளை கொடுத்து அனுப்பினார்.

தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி மாநிலத்தின் பொறுப்பு துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நேற்று (ஜனவரி 13) போகி பண்டிகை அன்று அனைத்து கட்சி எம்.எல்.ஏ,க்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை ராஜ் நிவாஸ் ஆளுநர் மாளிகைக்கு அழைத்து பொங்கல் விழா நடத்தினார்.

தமிழிசை செளந்தரராஜன் பொங்கல் வைக்கும்போது, இடது பக்கம் பாஜக அமைச்சர் நமச்சிவாயமும், வலது பக்கம் அமைச்சர் சாய் சரவணன் ஆகியோர் இருந்தனர். இதில் திமுக எம்.எல்.ஏக்களும் முன்னிலையில் இருந்தனர்.

பொங்கல் விழாவில் கலந்து கொண்ட முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளுக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முறுக்கு, அதிரசம் போன்ற பொருட்கள் அடங்கிய பொங்கல் பானைகளை கொடுத்து அனுப்பி வைத்தார்.

அடுத்த பொங்கல் விழாவில் திமுக அமைச்சர்களாக பங்கேற்போம் என்று திமுக எம்.எல்.ஏ சிவா தனது கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பேசிக்கொண்டே பொங்கல் பானையுடன் வெளியே சென்றார்.

வணங்காமுடி

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

வெள்ளி 14 ஜன 2022