மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜன 2022

பொங்கல் திருநாள்: முதல்வரின் வேண்டுகோள்!

பொங்கல் திருநாள்: முதல்வரின்  வேண்டுகோள்!

பொங்கல் திருநாளான இன்று பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தமாட்டோம் என்று உறுதிமொழி ஏற்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு உள்பட இந்தியாவில் பொங்கல் பண்டிகை ஜனவரி மாதத்தில் விமரிசையாக கொண்டாடப்படும். இந்தியா முழுவதும் தை திருநாள் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பொங்கல் என்றும் வட இந்தியாவில் பொதுவாக மகர சங்கராந்தி என்றும் அழைக்கப்படுகிறது. அஸ்ஸாமில் போகலி பிஹி, குஜராத்தில் உத்தராயன், ஆந்திராவில் சங்கராந்தி, பஞ்சாப் மாநிலத்தில் லோகிரி திருநாள், மகாராஷ்டிராவில் மகர சங்கராந்தி என்ற பெயரிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில் இன்று(ஜனவரி 14) நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இன்று அதிகாலையிலேயே தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்து தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் நாட்டு தலைவர்கள் அனைவரும் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

“தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக பொங்கல் திகழ்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த நாளன்று அனைவருக்கும், குறிப்பாக உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு, எனது வாழ்த்துக்கள். இயற்கையுடனான நமது பிணைப்பும் நமது சமூகத்தின் சகோதரத்துவ உணர்வும் இன்னும் ஆழமாவதற்கு நான் பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் நரேந்திர மோடியும்,

”தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கு எனது மகிழ்ச்சியான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். இந்த வருட பொங்கல் திருவிழா அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை தர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதுபோன்று கேரள முதல்வர் பினராயி விஜயன், எதிர்கட்சித் தலைவர் ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்,” தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் - தமிழ் இனநாள் - பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள். கழக ஆட்சி மலர்ந்து கொண்டாடும் முதல் பொங்கல் திருநாளில் மேலும், மேலும் தமிழ்நாட்டை மேன்மையுறச் செய்யும் ஊக்கத்தைப் பெறுகிறேன். உங்கள் அன்பால் ஊக்கத்தை உழைப்பாய் மாற்றிடுவேன். இயற்கையோடு இயைந்து தமிழர்கள் நாம் கொண்டாடும் பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பைகளை இனிப் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு, மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி மற்றும் மூத்த நிர்வாகிகள் உடன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

-வினிதா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

வெள்ளி 14 ஜன 2022