மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 ஜன 2022

நிதிநிலைமை பாதிக்காதவாறு உள்ளூர் கட்டுப்பாடுகள் : மோடி

நிதிநிலைமை பாதிக்காதவாறு உள்ளூர் கட்டுப்பாடுகள் : மோடி

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 2.47 லட்சம் பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது முந்தைய நாள் பதிவான பாதிப்பு எண்ணிக்கையைவிட 25 சதவிகிதம் அதிகமாகும். அதுபோன்று ஏழு நாட்களுக்கு முன்பு பதிவான எண்ணிக்கையைவிட 172 சதவிகிதம் அதிகமாகும்.

இவ்வாறு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை காணொளி காட்சி மூலம் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழகத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

காணொலி காட்சி மூலம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “கொரோனா பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாக்கத் தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம். இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் நாம் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். பீதி அடையும் சூழ்நிலை உருவாக்கப்படாமல் இருப்பதை நாம் முழுமையாகக் கவனித்துக் கொள்ளவேண்டும்.

பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு உள்ளூர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் . பொருளாதாரம் மற்றும் நிதிநிலைமை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்து நமது வளர்ச்சியைத் தொடர வேண்டும். எனவே, உள்ளூர் கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதிக பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளில் சோதனையை அதிகரிக்க வேண்டும்.

நாடு முழுவதும் சுமார் 92 சதவீத பேருக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 70 சதவிகிதம் பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது. 15-18 வயதுக்கு உட்பட்டவர்களில் 3 கோடி பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அதுபோன்று,முன்னெச்சரிக்கை தடுப்பூசியை எவ்வளவு சீக்கிரமாகச் செலுத்துகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நமது சுகாதார அமைப்பு பாதுகாப்பானதாக இருக்கும்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரே நாளில் 14 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். நமது விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார நிபுணர்கள் அனைத்து சூழ்நிலைகளையும் கண்காணித்து வருகின்றனர். எனவே நாம் அனைவரும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

வியாழன் 13 ஜன 2022