மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 ஜன 2022

முதல்வர் கடிதம்: பொங்கல் விடுமுறை அறிவித்த பினராயி விஜயன்

முதல்வர் கடிதம்: பொங்கல் விடுமுறை அறிவித்த பினராயி விஜயன்

தமிழகத்தில் நாளை முதல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் நாளை முதல் 18ஆம் தேதி வரை 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் வசிக்கும் வெளியூரைச் சேர்ந்த அனைவரும் நேற்று முதலே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்தனர்.

தமிழ்நாட்டு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதுபோன்று கேரள மாநிலத்தில் தமிழர்கள் வாழும் ஆறு மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக விடுமுறை அளிக்க அனுமதியை பெற்று தர வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரளத் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையின்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினார். அதில்,”தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான, உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன்.

கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14 ஆம் நாளினை பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகிறது என்று அறிகிறேன். ஜனவரி 14ஆம் தேதி, புனிதமான தை தமிழ் மாதத்தின் முதல் நாளாகும், ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டில் ஜனவரி 15ஆம் நாளினை இந்த 6 மாவட்டங்களில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, தமிழ்ச் சமூகங்களிடையே, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை தினமாக ஜனவரி 14 ஆம் நாளை அறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள நான் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநிலத்தில் தமிழ் பேசும் மக்கள் வாழும் 6 மாவட்டங்களிலும் ஏற்கனவே அறிவித்திருந்த 15ஆம் தேதி விடுமுறை என்பதை மாற்றி நாளை 14ஆம் தேதி விடுமுறையாக அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு அங்குள்ள தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வியாழன் 13 ஜன 2022