மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 ஜன 2022

புதுவை தலைமைச் செயலாளருக்கு கொரோனா!

புதுவை தலைமைச் செயலாளருக்கு கொரோனா!

புதுச்சேரி தலைமைச் செயலாளர் அஸ்வினி குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று 893 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுவரை புதுச்சேரி மாநிலத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 750 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடியின் புதுச்சேரி மற்றும் தமிழகம் வருகை ரத்து செய்யப்பட்டு, காணொலி காட்சி மூலம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

புதுச்சேரியில் தேசிய இளைஞர் தினவிழாவைக் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி டெல்லியிலிருந்து தொடங்கி வைத்தார்.

இதற்கான விழா புதுவையில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நேற்று நடந்தது. இவ்விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் தலைமைச் செயலாளர் அஸ்வினி குமாரும் கலந்து கொண்டார். ஆனால் அவர் மேடையில் அமராமல் தனியாக நாற்காலியில் அமர்ந்திருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்களின் அறிவுரையின்படி அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுவதாகப் புதுச்சேரி சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்று புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதுபோன்று நேற்று பிரதமர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழிசை சௌந்தரராஜன், பின்னர் சென்னையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வியாழன் 13 ஜன 2022