மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 ஜன 2022

இஸ்ரோவின் புதிய தலைவர்!

இஸ்ரோவின் புதிய தலைவர்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவராகக் கேரளாவைச் சேர்ந்த சோமநாத் என்பவரை மத்திய அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.

இந்திய அரசின் முதன்மையான, தேசிய விண்வெளி மையம் இஸ்ரோ, பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. கடந்த 1969ஆம் ஆண்டு முதல் இஸ்ரோ இயங்கி வருகிறது. இந்த இஸ்ரோவின் தலைவராக கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவன் நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த அவரின் பதவிக் காலத்தை 2022 ஜனவரி 14ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

ஓராண்டு நீட்டிக்கப்பட்ட இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சிவனின் பதவிக் காலம் வருகிற வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைய உள்ள நிலையில், இஸ்ரோவுக்குப் புதிய தலைவரை மத்திய அரசு நியமித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவராகக் கேரளாவைச் சேர்ந்த சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இஸ்ரோவின் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார். பொது நலன் கருதி ஓய்வுபெறும் வயதைத் தாண்டியும் பதவி நீட்டிக்கும் வாய்ப்பு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த சோமநாத்?

கேரளாவில் 1963ஆம் ஆண்டு சோமநாத் பிறந்தார். கேரளப் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டப்படிப்பில் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (IISc) ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் துறையில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார்.

Structures, Dynamics and Control பிரிவில் நிபுணத்துவம் வாய்ந்த இவர், 1985ஆம் ஆண்டில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இணைந்தார். ஆரம்பத்தில் பிஎஸ்எல்வி ஒருங்கிணைப்புக்கான குழுத் தலைவராக இருந்து, பின்னாளில் பிஎஸ்எல்வி திட்ட மேலாளராக உயர்ந்து, பிஎஸ்எல்வி திட்டத்தின் வழிமுறைகள், பைரோ அமைப்புகள், ஒருங்கிணைப்பு ஆகியவற்றைக் கண்காணித்து வந்ததுடன் செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். 2010இல் GSLV Mk-III ஏவுகணை திட்ட இயக்குநராகவும் நவம்பர் 2014 வரை உந்துவிசை மற்றும் விண்வெளி ஆணையத்தின் துணை இயக்குநராகவும் இருந்தார். உலகெங்கிலும் உள்ள மைக்ரோ சாட்லைட்டுகளுக்கு பிஎஸ்எல்வியை மிகவும் விரும்பக்கூடிய ஏவுகணையாக மாற்றிய இயந்திர ஒருங்கிணைப்பு வடிவமைப்புகளுக்கு அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள வலியமலா திரவ இயக்க திட்ட மையத்தின் இயக்குநராக ஜூன் 2015 முதல் ஜனவரி 2018 வரை பணியாற்றியுள்ளார்.

இதையடுத்து, 2018ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி முதல் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராகப் பதவி வகித்து வரும் சோமநாத், தற்போது இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கே.கஸ்தூரிரங்கன், ஜி.மாதவன் நாயர், கே.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்குப் பிறகு இந்தப் பதவியை வகிக்கும் நான்காவது மலையாளி சோமநாத் ஆவார்.

-வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வியாழன் 13 ஜன 2022