மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 ஜன 2022

போகி பண்டிகை: அமைச்சர் வேண்டுகோள்!

போகி பண்டிகை: அமைச்சர் வேண்டுகோள்!

பொங்கலுக்கு முந்தைய நாளான இன்று (ஜனவரி 13) போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற சொல்லாடலின்படி தேவையில்லாத துணிகளையும், பொருட்களையும் தீயிட்டு எரிப்பது வழக்கம். அதனுடன் டயர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களையும் எரிப்பதால் காற்று மாசுபாடு அதிகரிக்கும்.

இந்த நிலையில், இந்தாண்டு போகி பண்டிகையில் நச்சு கலந்த பொருட்களை எரிக்க வேண்டாம் என்று சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன்,விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து நேற்று (ஜனவரி 12) அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த ஆண்டுகளைப் போன்றே இந்தாண்டும் போகி பண்டிகைக்கு முன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் காரணமாக பழைய ரப்பர், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர், டியூப் போன்றவற்றை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது.

இந்த ஆண்டு நச்சு கலந்த பொருட்களை எரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், முதல்வர் அறிவுறுத்தலின்படி, சென்னை மாநகரம் மற்றும் அனைத்து மாவட்ட தலைமையிடங்களிலும் வாரியத்தின் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பிரச்சார ஊர்திகள் மூலம் சென்னை மாநகரின் 15 மண்டலங்களிலும் மற்றும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறது. இது தவிர, பண்பலை அலைவரிசை (எஃப்.எம்.ரேடியோ) மூலமும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், போகி பண்டிகையின்போது சென்னை மாநகரத்தின் சுற்றுச்சூழல் காற்று தரத்தினை கண்காணிப்பு செய்யும் பொருட்டு, போகிப் பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகி பண்டிகை நாளிலும், சென்னையின் 15 மண்டலங்களில் 24 மணி நேரமும் காற்றுத்தரத்தினை கண்காணிக்க காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்வதற்கு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.

எனவே, பொது மக்கள் நச்சு கலந்த பொருட்களை எரிக்க வேண்டாம். பழைய துணிகள் மற்றும் பயன்படத்தக்க பழைய பொருட்களை பிறருக்குக் கொடுத்து உதவலாம். தேவையற்ற பொருட்களை எரிக்காமல் சுற்றுச்சூழல் மாசுபடாத புகையில்லா போகி பண்டிகையை தமிழ்நாடு மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் டயர் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

வியாழன் 13 ஜன 2022