மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 ஜன 2022

கலைஞருக்கு நினைவிடம்: நிபந்தனைகளுடன் அனுமதி!

கலைஞருக்கு நினைவிடம்: நிபந்தனைகளுடன் அனுமதி!

மெரினாவில் கலைஞர் நினைவிடம் அமைக்க சில நிபந்தனைகளுடன் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு மறைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தற்போது திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில், கலைஞருக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க 39 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்காக, கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் ஆணையத்திடம் அனுமதி கோரி பொதுப்பணித்துறை விண்ணப்பித்திருந்த நிலையில், முதற்கட்டமாக இரண்டு பெவிலியன், இரண்டு கேலரிகள், 4 நீர் குளங்கள், கழிப்பறை என ஏற்கனவே அனுமதி பெறப்பட்ட 160 சென்ட் பரப்பளவில் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது.

அதுபோன்று நகர சீரமைப்பு திட்ட விதிகளின்படி உள்ளாட்சி அமைப்புகளிடம் பெறவேண்டிய முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். கடற்கரை ஒழுங்குமுறை மண்டல பகுதியிலிருந்து நிலத்தடி நீரை எடுக்கக்கூடாது. இந்தத் திட்டம் அமைய உள்ள இடத்தில் தினசரி 10 கிலோலிட்டர் திறன் கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பானை அமைக்க வேண்டும். திடக் கழிவுகள் அனைத்தையும் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கையாள வேண்டும். நினைவிடம் அமைய உள்ள இடத்தில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். நமது மண்ணிற்கு ஏற்ற செடி, கொடி, மற்றும் மரங்களை நட்டு பசுமை பரப்பாக உண்டாக்க வேண்டும்.

நில அதிர்வுகளைத் தாங்கும் வகையில் பசுமை கட்டிடமாக வடிவமைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்துள்ளது.

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

புதன் 12 ஜன 2022