மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 ஜன 2022

கொரோனா தடுப்பு பணி: தமிழ்நாடு அரசை பாராட்டிய மத்திய அமைச்சர்!

கொரோனா தடுப்பு பணி: தமிழ்நாடு அரசை பாராட்டிய மத்திய அமைச்சர்!

கொரோனா பரவலைத் தடுக்கும் பணியில் தமிழ்நாடு அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை இன்று(ஜனவரி 12) மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று காலை சென்னை வந்தார்.

இன்று மாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் அவசர 108 கட்டுப்பாட்டு அறை, கோவிட் கட்டளை மையம் மற்றும் ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, 108 வாகன மருத்துவப் பணியாளர்கள் முதலுதவி செய்வது குறித்து விளக்கினார்கள். ஆக்சிஜன் சிலிண்டர் இருப்பு குறித்து கேட்டறிந்த அமைச்சர், சிலிண்டர்கள் எண்ணிக்கையை தேவையான அளவு பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தொடர்ந்து,சேப்பாக்கத்தில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அங்குள்ள அம்மா முழு உடல் பரிசோதனை மையம் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கான மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வு குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில், “எனது தமிழக பயணத்தின் போது, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில், பிஎம் கேர்ஸின் கீழ் நிறுவப்பட்ட கட்டுப்பாட்டு அறைகள், கோவிட் கட்டளை அறை, 108 கட்டுப்பாட்டு மையம் மற்றும் PSA ஆக்ஸிஜன் ஆலைகளை ஆய்வு செய்தேன். கொரோனா தடுப்பு பணிகளில் தமிழ்நாடு அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

புதன் 12 ஜன 2022