மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 ஜன 2022

பிரதமருக்கு பாதுகாப்பு குளறுபடி: முன்னாள் நீதிபதி தலைமையில் குழு!

பிரதமருக்கு பாதுகாப்பு குளறுபடி: முன்னாள் நீதிபதி தலைமையில் குழு!

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையில் உச்ச நீதிமன்றம் குழு அமைத்துள்ளது.

கடந்த ஜனவரி 5ஆம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப்புக்கு பயணம் மேற்கொண்டார். ஆனால் பாதுகாப்பு குளறுபடி காரணமாக அவர் மீண்டும் டெல்லி திரும்பினார். இவ்விவகாரம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த், ஹிமா கோஹ்லி அமர்வில் இருந்து வருகிறது.

கடந்த ஜனவரி 10ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, “இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகளின் விசாரணைக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. விரிவான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இவ்வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் விசாரணை குழுவை நீதிபதிகள் அமைத்தனர்.

தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜெனரல், சண்டிகர் டிஜிபி, பஞ்சாப் ஏடிஜிபி (பாதுகாப்பு), மற்றும் பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரல் (பிரதமரின் வருகை தொடர்பான பதிவுகளைக் கைப்பற்றியவர்) ஆகியோரை இக்குழுவில் நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பிரதமரின் பாதுகாப்பு குறைபாட்டுக்கான காரணம், அதற்குக் காரணமான நபர்கள் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற பாதுகாப்பு மீறல்களைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இந்த குழு விசாரணை நடத்தவுள்ளது.

-பிரியா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

புதன் 12 ஜன 2022