மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 ஜன 2022

கொரோனாவை முறியடிக்க இரண்டு வழிகள்: டபிள்யூ.ஹெச்.ஓ!

கொரோனாவை முறியடிக்க இரண்டு வழிகள்: டபிள்யூ.ஹெச்.ஓ!

கொரோனா தொற்றை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், கொரோனா தொற்று தொடர்ந்து உருமாற்றம் அடைந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரான் எனும் தொற்று வேகமாக பரவி வருகிறது. புதிய திரிபால் கொரோனா தொற்று எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1.68 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 4,461 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் என்பதை அனைவருமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ட்விட்டரில், “கொரோனா தொற்று நிச்சயமாக தோற்கடிக்கபட வாய்ப்புள்ளது. அதற்கு உலக நாடுகளில் உள்ள அனைத்து அரசாங்கமும், உற்பத்தியாளர்களும் இரண்டு காரியங்களை உறுதி செய்ய வேண்டும். முதலாவதாக குறைந்த அளவு தடுப்பூசி செலுத்தப்படும் நாடுகளுக்கு தடுப்பூசி விநியோகித்தை அதிகரிக்க வேண்டும். இரண்டாவதாக, தடுப்பூசிகளைப் பெறுவதற்கான வளங்களை உறுதி செய்ய வேண்டும். உலகில் எல்லா இடங்களும் பாதுகாப்பு அடையும் வரை, எங்கும் பாதுகாப்பு இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

குறுகிய தேசியவாதம் மற்றும் தடுப்பூசிகளைப் பதுக்கி வைத்தல் ஆகியவற்றினால் ஆபத்து ஏற்படுமே தவிர நன்மைகள் கிடைக்காது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

முன்னதாக, கொரோனா தொற்றை வெறும் ஃப்ளூ காய்ச்சல் போல் கருத வேண்டாம். தற்போது வரை டெல்டா வைரஸே உலகளவில் மிகவும் அதிக பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது. ஒமிக்ரான் பரவல் அதிகமாக இருந்தாலும்கூட அதன் தாக்கம் குறைவு என்பது தற்போது வரை கிடைத்துள்ள தரவுகளால் உறுதியாகியுள்ளது. இதை வைத்தே யாரும் ஒமிக்ரானைக் குறைத்து மதிப்பிட்டுவிட வேண்டாம். அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

புதன் 12 ஜன 2022