மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 ஜன 2022

குமரியில் தரமற்ற சாலை: எச்சரிக்கும் அமைச்சர்!

குமரியில் தரமற்ற சாலை: எச்சரிக்கும் அமைச்சர்!

கன்னியாகுமரியில் தரமற்ற முறையில் நடந்த சாலை சீரமைப்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் சந்தித்து எச்சரிக்கை விடுத்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக கிடந்தது. இதனால் அந்த வழியாகச் செல்லும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். அதனால் அந்தச் சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

பல ஆண்டுகளின் போராட்டத்துக்குப் பிறகு, சாலையைச் சீரமைக்கும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

இந்த நிலையில், திருத்துவபுரம் பகுதியில் திருவனந்தபுரம் - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் போடப்பட்ட சாலையை சில இளைஞர்கள் கையால் பெயர்த்து எடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இதைத் தொடர்ந்து, கடமைக்காக சாலை சீரமைக்கும் பணி நடந்துள்ளது என்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தரமான முறையில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வெள்ளிகோடு பகுதியில் சாலை பணிகள் குறித்து தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரிடம் தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டிருப்பதாகவும், சாலையை கையால் பெயர்த்து எடுக்கும் வீடியோவையும் காட்டினார்.

இதையடுத்து சாலை ஒப்பந்ததாரர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை அழைத்து அமைச்சர் விளக்கம் கேட்டார்.

சாலை தரமற்ற முறையில் இருப்பதற்கு பல காரணங்களை கூறிய அதிகாரிகள், தரமற்ற சாலை பணிக்கு மாற்றி மாற்றி அடுத்தவரை குற்றம் சாட்டினார்கள். இதை ஏற்க மறுத்த அமைச்சர், “இது என்ன நியாயம்… இது சாலையா….விஜிலென்ஸுக்குத் தகவல் கொடுக்கட்டுமா” என்று எச்சரித்தார். “இந்தச் சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் பயணிக்கின்றனர். தற்போது போடப்பட்டிருக்கும் சாலை ரொம்ப நாளுக்கு தாங்காது. உடனடியாக சாலையை மீண்டும் தரமானதாக சீரமைக்க வேண்டும். எத்தனை நாட்களில் முடித்து கொடுப்பீர்கள் என்பதை கூறுங்கள். இதுபோன்று மீண்டும் நடக்கக் கூடாது” என்று எச்சரித்தார்.

இந்த நிலையில் அதிகாரிகளை அமைச்சர் எச்சரிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

புதன் 12 ஜன 2022