மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 ஜன 2022

தமிழ்நாட்டில் ஜனவரி 17 அரசு விடுமுறை!

தமிழ்நாட்டில் ஜனவரி 17 அரசு விடுமுறை!

தமிழ்நாட்டில் ஜனவரி 17ஆம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி 6ஆம் தேதி முதல், இரவு நேர ஊரடங்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஜனவரி 14(வெள்ளிக்கிழமை) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாகவும், ஜனவரி 16 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையிலும், ஜனவரி 18(செவ்வாய்க்கிழமை) தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறையானதாலும், இடைப்பட்ட நாளான ஜனவரி 17 (திங்கட்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பணியாளர்கள் சங்கங்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.

அக்கோரிக்கைகளை, அரசு கவனமுடன் பரிசீலித்து, ஜனவரி 17 (திங்கட்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஜனவரி 29 (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது

ஆனால், அவசர அலுவல்களை மேற்கொள்ளும் பொருட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கருவூலங்கள். சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படுவதற்கு தகுந்த ஏற்பாடுகளை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஜனவரி 17ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், பொங்கல் கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் பதட்டமின்றி பயணம் மேற்கொள்ள முடியும்.

-வினிதா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

செவ்வாய் 11 ஜன 2022