ஓட்டுநரிடம் லஞ்சம்: தொமுச செயலாளர் கைது!

politics

சேலத்தில் அரசு பேருந்து ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கிய திமுக, தொழிலாளர் முன்னேற்றச் சங்க செயலாளர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் இடமாறுதல் விவகாரத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் மிரட்டி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

தாரமங்கலம் போக்குவரத்துக் கழக பணிமனையில் பணியாற்றுபவர் பரமசிவம். இவர் மானத்தாள் கிராமம் கண்காணிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். தாரமங்கலத்தில் இருந்து திருவாரூர் செல்லும் அரசு பேருந்தில் ஓட்டுநராக உள்ளார்.

இந்நிலையில் பரமசிவம், இதே பேருந்தில் பணியாற்ற வேண்டும் என்றால் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் வேறு வழித்தடத்தில் மாற்றம் செய்து விடுவேன் என்று தொழிலாளர் முன்னேற்றச் சங்க செயலாளர் குணசேகரன் மிரட்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் மேச்சேரி அருகே உள்ள அமரம் கோல்காரன் வளவு பகுதியைச் சேர்ந்தவர்.

இந்த சூழலில் பரமசிவம், சேலம் லஞ்சம் ஒழிப்பு போலீசில் குணசேகரன் மிரட்டுவது தொடர்பாகப் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குணசேகரனைப் பிடிக்கத் திட்டமிட்டு, பரமசிவனிடம் ரசாயன பவுடர் தடவிய 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து அனுப்பினர்.

அந்த ரூபாய் நோட்டுகளுடன் தாரமங்கலம் அருகே தெப்பக்குளம் பகுதியில் நேற்று பிற்பகல் குணசேகரனைச் சந்திக்க வந்தார் பரமசிவம். சம்பவ இடத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜா, காவல் ஆய்வாளர்கள் நரேந்திரன், முருகன் ஆகியோர் மறைந்திருந்தனர்.

அப்போது ரசாயன பவுடர் தடவிய பணத்தை குணசேகரனிடம் பரமசிவன் கொடுத்தபோது போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர்.

பின்னர் அவரை அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். தொமுச தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தாரமங்கலம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில் அவரை போலீசார் கைது செய்தனர்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *