மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 ஜன 2022

பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்ட ஸ்டாலின், ஓபிஎஸ்

பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்ட ஸ்டாலின், ஓபிஎஸ்

தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று(ஜனவரி 11) பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

சுகாதாரப் பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடும் பணி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் போடும் பணியை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த சூழலில் நேற்று ஒரே நாளில் 9 லட்சத்து 84 ஆயிரத்து 676 பேருக்கு பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்துள்ளார். சுகாதாரத் துறை பணியாளர்கள் 5,19,604 பேருக்கும், முன் களப்பணியாளர்கள் 2,01,205 பேருக்கும், 60 வயதுக்கு மேலானவர்கள் 2,63,867 பேருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை காவிரி மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டேன். அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுபோன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

செவ்வாய் 11 ஜன 2022