மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 ஜன 2022

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு!

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு!

1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒமிக்ரான், கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், மருத்துவ மாணவர்களைத் தவிரக் கல்லூரி மாணவர்களுக்கும் 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதுபோன்று செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. அரசின் எச்சரிக்கையை மீறி கல்லூரி, பள்ளிகளை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

அதுபோன்று, “ஜனவரி 31ஆம் தேதி வரை அனைத்து கலை, அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடத்தப்படுவது குறித்து, தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு அறிவிப்பு வெளியாகும்” என்று உயர்கல்வி துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

செவ்வாய் 11 ஜன 2022