மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 ஜன 2022

ராஜ்நாத் சிங், நட்டாவுக்கு கொரோனா!

ராஜ்நாத் சிங், நட்டாவுக்கு கொரோனா!

இந்தியாவில் கொரோனா தொற்று ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. நேற்றைய தகவல் படி ஒரு நாள் பாதிப்பு 1,79,723 உட்பட மொத்தம் 7,23,619 பேருக்குத் தொற்று பாதிப்பு உள்ளது.

எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாடாளுமன்ற ஊழியர்கள் 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில்,, “கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் சோதனை செய்து கொண்டேன். இதில் தொற்று இருப்பது உறுதியானது. தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜே.பி.நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில், “லேசான கொரோனா அறிகுறி காரணமாகப் பரிசோதனை செய்துகொண்டேன். அதில், பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தது. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், தனிமைப்படுத்திக்கொண்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுபோன்று மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு ஜனவரி 9ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், அறந்தாங்கி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

செவ்வாய் 11 ஜன 2022