மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 ஜன 2022

கர்ப்பிணிகள் - மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வர வேண்டாம்!

கர்ப்பிணிகள் - மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வர வேண்டாம்!

கொரோனா பரவல் காரணமாக கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்று மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பல்வேறு சேவைகளுக்கு கட்டுப்பாடுகளும், தடையும் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்க அனுமதி அளித்து வருகின்றன.

இந்த நிலையில் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மத்திய அரசு துறையில் வேலை பார்க்கும் கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்துக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய வேண்டும். அதுபோன்று கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் வசிக்கும் ஊழியர்களும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம். துணைச் செயலர்கள் அந்தஸ்துக்கு கீழ் உள்ள ஊழியர்களில் 50 சதவிகிதம் பேர் மட்டுமே பணிக்கு வர வேண்டும். மற்றவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும். இது சுழற்சி முறையில் அமல்படுத்தப்படும்.

அலுவலகத்துக்குச் செல்லாத மற்றும் வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்கள், வேலை நேரத்தில் அலுவலகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும்.

முடிந்தவரை, அலுவலகக் கூட்டங்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே நடத்த வேண்டும். அதுபோன்று மிகவும் அவசியமானால் தவிர, பார்வையாளர்களுடனான தனிப்பட்ட சந்திப்பை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அடிக்கடி கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற கொரோனா தடுப்பு வழிமுறைகளை கண்டிப்பாக அனைத்து அதிகாரிகளும் பணியாளர்களும் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த விதிமுறைகள் ஜனவரி 31ஆம் தேதிவரை நடைமுறையில் இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

திங்கள் 10 ஜன 2022