மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 ஜன 2022

பெருகிப் பரவும் கொரோனா- கபடி ஆடும் ஆட்சியாளர்கள்!

பெருகிப் பரவும் கொரோனா- கபடி ஆடும் ஆட்சியாளர்கள்!

கொரோனா மற்றும் ஒமிக்ரோன் வைரஸ் தீயாகப் பரவி வரும் நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் பாஜக அமைச்சர்கள் கபடி விளையாடி ஆட்டத்தைத் துவக்கி வைத்துள்ளது புதுச்சேரி அரசியல் அரங்கில் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாகப் பரவி வருவதால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளது தமிழக அரசு. மேலும் புத்தாண்டு கொண்டாடத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டின. தமிழகம், கர்நாடக, மற்றும் ஆந்திரா மாநில சுற்றுலா பயணிகள், 12 லட்சம் மக்கள் தொகைக் கொண்ட புதுச்சேரி மாநிலத்தில் குவிந்தனர். அதன் விளைவு இன்று கொரோனா பாதிப்பு புதுச்சேரியில் பெருமளவு உயர்ந்துள்ளது.

கடந்த 8ஆம் தேதி 279 பேருக்குத் தொற்று ஏற்பட்டது. 9ஆம் தேதி 444 பேருக்குப் பாதித்தது. 10 ஆம்தேதி இன்று 489 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மொத்தம் 1722 பேர் கொரோனா தொற்றால் பாதித்துள்ளார்கள். இப்படி வைரஸ் பரவி வரும் நிலையில், ஜனவரி 9ஆம் தேதி, மாநில அளவிலான கபடிப் போட்டியைத் துவக்கி வைத்து, இரு அணியிலும் இருவர் நின்று வெறித்தனமாக கபடி விளையாடினார்கள். அந்த இருவர் பாஜக மூத்த அமைச்சர் நமச்சிவாயமும், சபாநாயகர் ஏம்பலம் செல்வமும்தான்.

இது போதாது என்று ஜனவரி 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையில் தேசிய இளைஞர் விழா நடத்துகிறார்கள் பாஜகவினர். இந்த விழாவில் இந்தியா முழுவதும் இருந்தும் சுமார் 1500 பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள்.

இதனால் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகப் பரவும், மக்கள் பெரும் அளவுக்குப் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

-வணங்காமுடி

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

திங்கள் 10 ஜன 2022