மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 ஜன 2022

ஜாமீன் கேட்கும் ராஜேந்திர பாலாஜி: விசாரணை ஒத்திவைப்பு!

ஜாமீன் கேட்கும் ராஜேந்திர பாலாஜி: விசாரணை ஒத்திவைப்பு!

ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை ஜனவரி 12ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் வரை பண மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 2 வழக்குகளைப் பதிவு செய்தனர்.

இதனால் முன்ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் அவருக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டது. இதையடுத்து தலைமறைவான அவர் தனது வழக்கறிஞர் மூலம் உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தார்.

ஜனவரி 6ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில், ஜனவரி 5 ஆம் தேதி கர்நாடகாவில் வைத்து கைது செய்யப்பட்டார் ராஜேந்திர பாலாஜி. தற்போது அவர் 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக மின்னம்பலத்தில் ராஜேந்திர பாலாஜி: சேஸிங் ரிப்போர்ட்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய தமிழக அரசு இவ்வளவு அவசரம் காட்டியது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தது. இதுதொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இவ்வழக்கு மீண்டும் இன்று (ஜனவரி 10) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில், முகுல் ரோத்தகி ஆஜரானார். மனுதாரர் சார்பாக மூத்த வழக்கறிஞர் துஷ்வந்த் தவே ஆஜரானார்.

மூத்த வழக்கறிஞர் துஷ்வந்த் தவே வாதிடுகையில், கொரோனா காலத்தை முன்னிட்டு 2020ல் வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘7 ஆண்டுகள் தண்டனைக்குக் குறைவான வழக்குகளில் தேவையில்லாமல் யாரையும் கைது செய்ய வேண்டாம்’ என்று தெரிவித்திருந்தது. அந்த உத்தரவை மீறி ராஜேந்திர பாலாஜியை கைது செய்திருக்கின்றனர். அதுபோன்று கொரோனா காலமாக உள்ளது. நாங்கள் விசாரணைக்குத் தயாராக இருக்கிறோம். ஒரு மாத காலம் ஜாமீன் வழங்க வேண்டும் ” என்று தெரிவித்தார்.

அப்போது ஏன் ராஜேந்திர பாலாஜிக்கு ஒரு மாதம் ஜாமீன் வழங்கக் கூடாது என்று கேள்வி எழுப்பியது.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்து தமிழக அரசு சார்பில், மோசடி வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் அனைத்தும் வேலைகளிலும் ராஜேந்திர பாலாஜி ஈடுபட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது அடிப்படை ஆதாரமற்றது. கூடுதல் ஆவணங்களைப் பார்த்துவிட்டு ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

திங்கள் 10 ஜன 2022