மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 ஜன 2022

மக்களின் உயிர்தான் முக்கியம்: முதல்வர் ஸ்டாலின்!

மக்களின் உயிர்தான் முக்கியம்: முதல்வர் ஸ்டாலின்!

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் காணொளி காட்சி மூலம் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் விழாக்களை விட மக்களின் உயிர்தான் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திருச்சி மற்றும் தஞ்சையில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஏறத்தாழ 5000 பேர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், இந்த விழாவை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு ஒரு மாநாடு போல நடத்தியிருக்கிறார் என்று குறிப்பிட்டார்.

கொரோனா அதிகரித்து வந்த நிலையில் இவ்வளவு பேரைக் கூட்டி கூட்டம் நடத்தியதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்தார். முதலமைச்சரின் உத்தரவை அவரே மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது என்றும் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம், ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தேர்தல் அலுவலக கட்டிடம், பழுதான அரசுப் பள்ளி கட்டிடங்கள் உள்ளிட்ட திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சர் முத்துசாமி சிறப்பாக இந்த பணிகளை நிறைவேற்றி இருக்கிறார்.

கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்தால் ஈரோட்டில் மாபெரும் விழாவை- விழா என்று சொல்ல முடியாது. ஒரு பெரிய மாநாட்டை நடத்தி இருப்பார். நானும் நேரடியாக வந்து கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றிருப்பேன். ஆனால் நோய் தொற்று இந்த நிகழ்ச்சிக்குத் தடை போடக் கூடிய வகையில் அமைந்துவிட்டது.

இருந்தாலும் விழாக்களை விட மக்களின் உயிர் தான் நமக்கு முக்கியம். இதை அமைச்சர் முத்துசாமியும் நன்றாக அறிவார். இன்னும் சில வாரங்களில் இந்த நோய்த் தொற்று குறையும் சமயத்தில், அதைக் கட்டுப்படுத்துகிற சூழல் அமைந்த பிறகு நிச்சயமாக ஈரோட்டுக்கு நேரடியாக வருகை தந்து மக்களைச் சந்திப்பேன்.

ஈரோடு என்பது பெரியார் பிறந்த ஊர். அண்ணா வாழ்ந்த ஊர். கலைஞரின் குருகுலம் ஈரோடு.

தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் அரசு விழாவில் பங்கேற்ற இந்த நேரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கக்கூடிய ஓபிசி பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு பெரியாருக்குக் கிடைத்த காணிக்கையாக நான் நினைக்கிறேன்.

அவர் உருவாக்கிக் கொடுத்த சமூகநீதி தத்துவத்தை இன்றைய தினம் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் காலமானது உருவாகியிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

திங்கள் 10 ஜன 2022