மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 ஜன 2022

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி : என்னென்ன கட்டுப்பாடுகள்?

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி : என்னென்ன கட்டுப்பாடுகள்?

இந்தாண்டு கொரோனா காரணமாக தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்குமா என்ற சந்தேகம் அனைவரிடமும் இருந்தது. மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நிச்சயம் நடைபெறும். போட்டியை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை இன்று மாலைக்குள் முதல்வர் வெளியிடுவார் என்று கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இன்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், சுகாதாரத் துறை மருத்துவத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், இன்று(ஜனவரி 10) பிற்பகல் தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில், “பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதி.

எருது விடும் நிழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதி.

150 பார்வையாளர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி.

அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 50% என்ற எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

காளையுடன் உரிமையாளர் ஒருவர், உதவியாளர் ஒருவர் என 2 பேருக்கு மட்டுமே அனுமதி. அவர்கள் தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்தியிருக்க வேண்டும், இரண்டு நாட்களுக்கு முன்பு பெறப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு போட்டியை ஒருங்கிணைக்கும் அதிகாரிகள், மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்

இரண்டு நாட்களுக்கு முன்பு அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

காளைகளை பதிவு செய்யும் பொழுது அக்காளையின் உரிமையாளர் மற்றும் உடன்வரும் உதவியாளர் ஆகியோரும் பதிவு செய்தல் வேண்டும்.

ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்களுக்கு, நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து மூன்று நாட்கள் முன்பாக பதிவு செய்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.

அடையாள அட்டை இல்லாத நபர்களுக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.

அனைத்து துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும். பார்வையாளர்களும் மற்றும் ஊடகத் துறை சார்ந்தவர்களும் அரசினால் அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

வெளியூரில் வசிப்பவர்கள், ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை தொலைக்காட்சி மற்றும் இணைய வழியாக காண வேண்டும்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்த அரசின் முன் அனுமதி பெற்று பிராணிகள் வதை தடுப்பு விதிகள், 2017 அரசினால் வெளியிடப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றுடன் அரசினால் விதிக்கப்படும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அரசே நடத்தும்

இன்று மாலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி,” ஜல்லிக்கட்டு குழு அமைப்பதில் உடன்பாடு ஏற்படாததால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகமே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாலமேடு, அலங்காநல்லூர் போட்டிகள் ஆட்சியர் தலைமையில் நடைபெறும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இந்தாண்டு நேரடியாக டோக்கன் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம். ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் காலை 7 மணிக்கு தொடங்கும். நாட்டு காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதி. வீரர்களோ, காளைகளோ ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும். ஜல்லிக்கட்டு போட்டிகளை காண உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள கிராம மக்கள், வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலத்தவர்களுக்கு அனுமதி இல்லை. அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் அரசு சார்பில் காலை, மதிய உணவு வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

திங்கள் 10 ஜன 2022