மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 ஜன 2022

குஷ்புவுக்கு கொரோனா!

குஷ்புவுக்கு கொரோனா!

நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் , “கடந்த இரண்டு கொரோனா அலைகளில் இருந்து தப்பித்து வந்த எனக்கும் இறுதியாக கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை வரை எனக்கு தொற்று ஏற்படவில்லை. ஆனால், இப்போது கொரோனா பாசிட்டிவ் என தெரிய வந்துள்ளது. கடுமையான சளி இருந்ததால் நான் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது. அதனால் என்னை நான் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். தனியாக இருப்பது என்பது எனக்கு பிடிக்காது. அதனால் அடுத்த ஐந்து நாட்களில் சமூக வலைதளங்களில் என்னோடு இருங்கள். உங்களுக்கும் இது போன்று ஏதேனும் அறிகுறி இருந்தால் பரிசோதனை மேற்கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

கொரோனா இரண்டு அலை முடிந்து தற்போது ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு என பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இன்னொரு பக்கம் நடிகர்கள் மகேஷ்பாபு, சத்யராஜ், விஷ்ணு விஷால், அருண் விஜய், த்ரிஷா என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தங்களை தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நடிகை குஷ்புவும் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆதிரா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

திங்கள் 10 ஜன 2022