மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 ஜன 2022

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!

தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. ஒருவேளை கொரோனா தொற்று மேலும் அதிகரித்தால் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படும் என்று ஏற்கனவே அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் ஜனவரி 20ஆம் தேதி நடைபெறவிருந்த அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் குறைந்த பிறகு எப்போது தேர்வுகள் நடைபெறும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். எழுத்துத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டாலும், செய்முறை தேர்வுகள் நடைபெறும்.

தற்போது அளிக்கப்பட்டுள்ள விடுமுறையைப் பயன்படுத்தி பாடங்களை படித்து தேர்வுக்கு மாணவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். கொரோனா தாக்கத்தைப் பொறுத்து ஒரு வாரத்திற்கு முன்னதாக தேர்வு தேதி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். முடிந்தவரை தேர்வுகள் நேரடியாக நடைபெறும். மாணவர்களின் உடல்நலம், கல்வி தரம் இரண்டையும் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

-வினிதா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

திங்கள் 10 ஜன 2022