மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 ஜன 2022

தொடங்கியது பூஸ்டர் டோஸ் போடும் பணி!

தொடங்கியது பூஸ்டர் டோஸ் போடும் பணி!

கொரோனா மூன்றாவது அலை பரவிவரும் நிலையில் நாடு முழுவதும் முன்கள பணியாளர்களுக்கு மூன்றாவது டோஸ் போடும் பணியும் தொடங்கியுள்ளது.

சமீப நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 723 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் 4033 பேர். தமிழகத்தில் இதுவரை 185 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூன்றாம் அலை பரவல் காரணமாக முன் களப் பணியாளர்களுக்கு ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

அதன்படி நாடு முழுவதும் இன்று முன் களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டு இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை முன் களப்பணியாளர்கள் 9.78 லட்சம் பேர், சுகாதாரப் பணியாளர்கள் 5.65 லட்சம் பேர், 60 வயதுக்கு மேற்பட்டு இணை நோய்களால் பாதிக்கப்பட்ட 20.3 லட்சம் பேர் என மூன்றாவது டோஸ் செலுத்திக் கொள்ள 35.46 லட்சம் பேர் தகுதியானவர்கள் ஆவர்.

இவர்களில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு முன்பு வரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், அதாவது 2 டோஸ் போட்டுக்கொண்டு 35 வாரங்கள் அல்லது 9 மாதங்கள் (273 நாட்கள்) முடிவுற்றவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

அதன்படி இன்று நான்கு லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தகுதி உடையவர்களாவர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடும் பணியை முதல்வர் ஸ்டாலின் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள இமேஜ் கலையரங்கில் தொடங்கி வைத்தார். காவல்துறையினர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கு முதல்வர் முன்னிலையில் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டது.

இந்த சூழலில், மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில், கோவாக்ஸின் மூன்றாவது டோஸ் நம்பிக்கை அளிக்கிறது. கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்களுக்கு 6 மாதம் கழித்து பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும். இது இம்மியூனோஜெனிசிட்டியை அதிகரிக்கிறது. மரபணு ஒப்புமை உடைய, ஒப்புமையற்ற கோவிட் திரிபுகளுக்கு எதிராக இந்த முன்னெச்சரிக்கை டோஸ் நல்ல அளவில் ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது” என்று தெரிவித்துள்ளது.

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

திங்கள் 10 ஜன 2022