மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 ஜன 2022

ஜல்லிக்கட்டு நடக்குமா? நடக்காதா?

ஜல்லிக்கட்டு நடக்குமா? நடக்காதா?

பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா இல்லையா என்பது குறித்து வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் இரவுநேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக பொங்கல் பண்டிகையையொட்டி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. அதனால், மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா?அப்படியே போட்டிகள் நடைபெற்றாலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்தது.

இருப்பினும், மதுரை அவனியாபுரத்தில திட்டமிட்டப்படி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் நோக்கில் வாடிவாசல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோயில் முன்பாக முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி இன்று(ஜனவரி 10) அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று மதுரையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, “கொரோனா மூன்றாம் அலையை கட்டுக்குள் கொண்டுவர பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கொரோனா மற்றும் ஒமிக்ரானை கட்டுப்படுத்த முதல்வர் தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். மதுரையில் மூன்றாம் அலையை எதிர்கொள்ள அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. மாவட்டம் முழுவதும் கிராமம் கிராமமாக சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணர்வு அளித்து வருகிறோம்” என்று கூறினார்.

ஜல்லிக்கட்டு குறித்து பேசிய அவர், “பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து ஏற்கனவே முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். அதனால் ஜல்லிக்கட்டு போட்டி நிச்சயமாக நடைபெறும். ஜல்லிக்கட்டு போட்டிகளை என்னென்ன மாதிரியான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நடத்தலாம் என்பது குறித்து முதல்வர் ஆலோசனை செய்து, இன்று மாலைக்குள் அதன் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறோம். அதனைத் தொடர்ந்து போட்டிக்கான ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது” என்று கூறினார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

திங்கள் 10 ஜன 2022