மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 ஜன 2022

கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு?: முதல்வர் ஆலோசனை!

கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு?: முதல்வர் ஆலோசனை!

தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த இரண்டு நாட்களாக 10 ஆயிரத்தைக் கடந்து பதிவாகி வருகிறது. நேற்று புதிதாக 12,895 பேருக்கு உட்பட மொத்தம் 40,260 பேருக்கு தொற்று பாதிப்பு உள்ளது.

பாதிப்பு அதிகரிப்பதால், கடந்த ஜனவரி 6ஆம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டது.

அதன்படி நேற்று (ஜனவரி 9) கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சென்னை, மதுரை, நெல்லை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் போலீஸார் தடுப்புகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால் நேற்று முக்கிய சாலைகள் எல்லாம் வெறிச்சோடி காணப்பட்டன.

இந்தச் சூழலில் ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடையும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.

இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தற்போது உள்ள கட்டுப்பாடுகளை அப்படியே நீட்டிக்கலாமா அல்லது பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.

அதுபோன்று விரைவில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவில் 224 நாட்களுக்கு முன்பு இருந்தது போல கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில் நேற்று மாலை பிரதமர் மோடி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் இருப்பு , எந்தெந்த பகுதிகளில் தடுப்பூசி குறைவாகப் போடப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்த உத்தரவிட்டார், அனைத்து மாநிலங்களும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், மருந்துகள் ஆகியவற்றைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

அதுபோன்று மாநிலங்களில் உள்ள சுகாதார கட்டமைப்புகள் குறித்து விவாதிக்க முதல்வர்களுடன் விரைவில் ஒரு கூட்டம் கூட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

திங்கள் 10 ஜன 2022