மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 ஜன 2022

ஆளுநரை சந்தித்த எல். முருகன்

ஆளுநரை சந்தித்த எல். முருகன்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை ஒன்றிய தகவல்- ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சரும் முன்னாள் தமிழக பாஜக தலைவருமான எல். முருகன் இன்று (ஜனவரி 9) சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து முருகன், “மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர். என். ரவி அவர்களை. சென்னையில் சந்தித்தேன். அவரது பரந்த அனுபவம் நமது மாநிலத்தின் நலனுக்காக மதிப்புமிக்க வழிகாட்டுதலை வழங்குகிறது" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தமிழக பாஜக தலைவர்களும், அதிமுக பிரதிநிதிகளும் ஆளுநரை சந்தித்து வருகின்றனர். அண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பஞ்சாப்பில் பிரதமரது பாதுகாப்பு விவகாரம் பற்றி ஆளுநரிடம் ஒரு கடிதத்தை வழங்கினார்.

இந்த நிலையில் இன்று ஒன்றிய இணை அமைச்சர் முருகன் ஆளுநரை சந்தித்திருக்கிறார். நீட் தேர்வு தொடர்பாக தமிழக சட்டமன்றத்தின் சட்ட மசோதாவை ஆளுநர் இன்னும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது பற்றி நேற்று தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜக வெளிநடப்பு செய்தது. இன்று கூட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த பின்னணியில் நீட் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு தமிழக விவகாரங்கள் தொடர்பாக எல். முருகன் ஆளுநர் சந்திப்பு நடந்திருக்கலாம் என்கிறார்கள் பாஜக வட்டாரங்களில்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

ஞாயிறு 9 ஜன 2022