மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 ஜன 2022

பொங்கல் பரிசின் தரம்: அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

பொங்கல் பரிசின் தரம்: அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த ஜனவரி 4 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 2.15 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், இதுதொடர்பாக பல்வேறு புகார்களும் வந்து கொண்டிருக்கிறது.

அரசு அறிவித்த 20 பொருட்களும் கிடைக்கவில்லை, புளி உள்ளிட்ட பொருட்கள் தரமற்றவையாக இருக்கின்றன, பை இல்லாமல் பரிசு தொகுப்பை வழங்குகின்றனர் என பல்வேறு குற்றச்சாட்டுகள் தினம்தோறும் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் பொங்கல் பரிசு தொகுப்புகளை மக்கள் மகிழ்ச்சியோடு பெற்று வந்தாலும் சிலர் இதில் திட்டமிட்டு தவறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். எனவே எவ்வித புகார்களுக்கும் இடமின்றி பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கும் பணிகளை அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

ஞாயிறு 9 ஜன 2022