மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 ஜன 2022

இலங்கை மீது இறுகும் சீனாவின் பிடி: போன மாதம் தூதர், இந்த மாதம் வெளியுறவு அமைச்சர்!

இலங்கை மீது இறுகும் சீனாவின் பிடி:  போன மாதம் தூதர், இந்த மாதம் வெளியுறவு அமைச்சர்!

சீன வெளியுறவுத் துறை அமைச்சர் யாங் லீ இன்று (ஜனவரி9) இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவையும், பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷேவையும் சந்தித்துப் பேசினார்.

கடந்த டிசம்பர் 15, 16, 17 தேதிகளில் இலங்கைக்கான சீன தூதர் கி சென்ஹாங் (Qi Zhenhong) இலங்கையின் தமிழர் பகுதியான யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணத்துக்குப் பயணம் சென்றார். அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலங்கை எல்லையில் இருக்கும் ராமர் பாலத் தின் மணல் திட்டுகள் வரை வந்து சென்றார் சீன தூதர். இதுபற்றி மின்னம்பலத்தில் இலங்கை தமிழர் பகுதிகளில் சீன தூதர்: இந்தியாவுக்கான எச்சரிக்கை என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இலங்கைக்கான சீனாவின் தூதர் வந்து சென்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ இப்போது இலங்கைக்கு வந்திருக்கிறார்.

எரித்ரியா, கென்யா, ஆப்ரிக்கா, கொமரோஸ் என தொடர் பயணத்தில் மாலத்தீவுக்கு அடுத்ததாக இலங்கைக்கு நேற்று (ஜனவரி 8) வந்தடைந்தார் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர்.

இன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவையும், பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷேவையும் தனித்தனியாக சந்தித்தார்.

சீன வெளியுறவுத் துறை அமைச்சருடனான சந்திப்பு பற்றி தனது ட்விட்டர் தளத்தில், “ சீனாவின் வெளியுறவு அமைச்சரோடு மிக இனிய சந்திப்பு. சீனாவில் இலங்கை மருத்துவ மாணவர்களுக்கான கல்வி, சுற்றுலா, முதலீடுகள், கொரோனா நிவாரணம், கொரோனாவுக்குப் பிந்தைய நிலை உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து விவாதித்தோம்” என்று மகிந்த ராஜபக்‌ஷே குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தங்கள் செல்வாக்கை நிலைநாட்ட இந்தியாவும், சீனாவும் போட்டி போடும் நிலையில் சீன வெளியுறவுத் துறை அமைச்சரின் இலங்கைப் பயணம் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் நிலையில் கடந்த மாதம்தான், இந்தியாவுக்கு வந்து உதவி கோரி பெற்றார் இலங்கை நிதியமைச்சரான ஃபசில் ராஜபக்‌ஷே என்பது நினைவுகூறத் தக்கது.

-வேந்தன்

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

ஞாயிறு 9 ஜன 2022