மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 ஜன 2022

உயிர் இழந்தவர் பெயரில் பயிர்க் கடன்: எடப்பாடியில் நடந்த ஊழல்!

உயிர் இழந்தவர் பெயரில் பயிர்க் கடன்: எடப்பாடியில் நடந்த ஊழல்!

கடந்த அதிமுக ஆட்சியில் நகைக் கடன்களிலும், விவசாய பயிர் கடன்களிலும் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்பதை கடந்த சில நாட்களாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்ந்து கூறி வருகிறார்.

அதிலும் குறிப்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டத்தில் இந்த கூட்டுறவுக் கடன்களில் பெருமளவிலான முறைகேடுகள் நடந்திருப்பதை சட்டமன்றத்திலேயே பதிவு செய்திருக்கிறார் கூட்டுறவுத் துறை அமைச்சர்.

“சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சோளம், மரவள்ளிக்கிழங்கு பெருமளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இப்பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு வழங்கப்படும் கடன் தொகை மிகவும் குறைவு என்பதால், பயிர்க் கடன் தொகை அதிக அளவு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் மஞ்சள், வாழை ஆகிய பயிர்களைக் குறிப்பிட்டு கிராம நிர்வாக அலுவர்களிடம் சிட்டா அடங்கல் பெறாமல் கடன் பெறும் விவசாயிகளே சுய உறுதிமொழி அளித்து கடன் பெற்ற விவரம் கள ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் விவசாயிகள் தங்களிடம் உள்ள நிலப்பரப்பை விட கூடுதல் பரப்பைக் குறிப்பிட்டுக் கடன் பெற்றுள்ளனர். இந்த வகையான முறைகேடுகள் பிற மாவட்டங்களிலும் நடைபெற்றுள்ளபோதிலும் 97 விழுக்காடு சேலம், நாமக்கல் மாவட்டங்களில்தான் நடைபெற்றுள்ளது” என்று சட்டமன்றத்தில் கூறியிருக்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி.

இவ்வளவு பெரிய அளவிலான மோசடியில் இறந்தவர்களின் பெயரில் கடன் பெறும் மோசடிகளும் நடைபெற்றுள்ளன. அதிலும் முன்னாள் முதல்வரின் எடப்பாடி தாலுகாவிலேயே இறந்தவர்களின் பெயர்களில் கூட்டுறவு வங்கிக் கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகாவில் உள்ள வெள்ளரி வெள்ளி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில்...முறைகேடுகள் நடப்பதாக அறிந்து, அதுகுறித்து விசாரிக்க அந்த கடன் சங்கத்தில் கடன் பெற்ற வேட்டுவப்பட்டியை சேர்ந்த ராமசாமியை டிசம்பர் 10 ஆம் தேதி கொங்கணாபுரம் கூட்டுறவு வங்கியில் ஆஜராகுமாறு விசாரணை அதிகாரி முரளி கிருஷ்ணன் சம்மன் அனுப்பினார். அதைப் பெற்ற அவரது வீட்டார் அதிர்ச்சி அடைந்து, 10-01-2012 ஆம் ஆண்டிலேயே ராமசாமி இறந்துவிட்டார் என்று அவரது இறப்புச் சான்றிதழையும் கொண்டுபோய் கொடுக்க அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர்.

குறிப்பிட்ட இந்த விவசாயி ராமசாமி பெயரில் கடந்த ஆண்டு 2021 ஜனவரி மாதம் ரூ 110000/ : கடன் பெற்று சங்க தலைவர் மற்றும் செயலாளர் மோசடி செய்துள்ளார்கள். இந்த சங்கத்தில் இதேபோல 30 கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் செய்துள்ளார்கள் என்கிறார்கள் கூட்டுறவு அதிகாரிகள்.

இதுபோல் இன்னும் பல விவகாரங்கள் சேலம் மாவட்டத்திலேயே நடைபெற்றிருக்கிறது. அடுத்த ஆட்சியும் எடப்பாடி ஆட்சிதான் என்ற அதீத நம்பிக்கையில்தான் இவ்வளவு ஊழல்கள் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றிருக்கின்றன என்கிறார்கள் சேலம் கூட்டுறவுத் துறையில் நேர்மையாக பணியாற்றும் சிலர்.

-வேந்தன்

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

ஞாயிறு 9 ஜன 2022