kநாடாளுமன்ற ஊழியர்கள் 400 பேருக்கு கொரோனா!

politics

a

பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், 400க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பாதிப்பில் டெல்லி இரண்டாம் இடத்தில் உள்ளது. டெல்லியில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் தான் இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஜனவரி 4 முதல் 8ஆம் தேதி வரை நாடாளுமன்ற ஊழியர்கள் 1,409 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 402 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களது மாதிரிகள் தற்போது ஒமிக்ரான் மாறுபாடு உறுதிப்படுத்தலுக்காக மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

200 மக்களவை மற்றும் 69 மாநிலங்களவை ஊழியர்களுக்கும் , நாடாளுமன்றத்துக்குத் தொடர்புடைய ஊழியர்கள் 133 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஏ.என்.ஐ. தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த பல்வேறு அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேசமயத்தில் மற்ற ஊழியர்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *