மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 ஜன 2022

நாடு தழுவிய ஊரடங்கா?: பிரதமர் ஆலோசனை!

நாடு தழுவிய ஊரடங்கா?: பிரதமர் ஆலோசனை!

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று மாலை பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தவுள்ளார்.

கடந்த 10 தினங்களுக்கு முன்பு 10 ஆயிரம் என்ற எண்ணிக்கையிலிருந்த கொரோனா பாதிப்பு இன்று 1.50 லட்சத்தைக் கடந்துள்ளது. பாதிப்பு அதிகரித்து வருவதால் மாநிலங்கள் அந்தந்த பகுதிகளின் நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்று ஏற்கனவே மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதனால் தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்களுக்கு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதுபோன்று கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பல்கலைக் கழகங்கள் செமஸ்டர் தேர்வுகளை ஒத்தி வைத்து வருகின்றன.

இதுபோன்று பல்வேறு மாநிலங்களும் கட்டுப்பாடுகளை அதிகரித்து வரும் நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இதில் பங்கேற்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் பண்டிகை காலங்கள் வரவுள்ள நிலையில் ஊரடங்கைத் தீவிரப்படுத்துவது, மருத்துவ கட்டமைப்புகள், தேவையான ஆக்சிஜன் இருப்பு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த சூழலில் ஓராண்டுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது போன்று மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வியையும் சமூக வலைதளவாசிகள் எழுப்பி வருகின்றனர்.

அதுபோன்று நாளையுடன் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நிறைவடையவுள்ள நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெறவுள்ளது.

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

ஞாயிறு 9 ஜன 2022