நாய்களுக்கு பிஸ்கட்… ரவுடிகளுக்கு பிஸ்டல்: செங்கல்பட்டு என்கவுன்ட்டர்- வெளிவராத ஸ்பாட் ஷாட் ரிப்போர்ட்!

politics

ஜனவரி 6 ஆம் தேதி இரவு செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த இரட்டைக் கொலைகளின் குற்றவாளிகளை ஜனவரி 6 ஆம் தேதி அதிகாலை என்கவுண்ட்டர் செய்தது, எதிர்க்கட்சிகளின் சட்டம் ஒழுங்கு புகாருக்கு துப்பாக்கி ரவைகளால் பதிலளித்ததைப் போல இருக்கிறது என்கிறார்கள் போலீஸ் வட்டாரங்களில்.

போலீஸார் இந்த என்கவுண்ட்டர் பற்றி சில தகவல்களை அதிகாரபூர்வமாக சொல்லியிருந்தாலும் உண்மையில் நடந்தது என்ன என்பது பற்றி போலீஸ் வட்டாரத்திலேயே விசாரித்தோம்.

“ஜனவரி 6 ஆம் தேதி மாலை வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ் குமார் தலைமையில் டிஐஜி சத்தியப் பிரியா, எஸ்.பி. அரவிந்தன் மற்றும் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்களுடன் சட்டம் ஒழுங்குப் பாதுகாப்பது பற்றி மீட்டிங் நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில்தான் எஸ் பி அரவிந்தனுக்கு ஒரு தகவல் வந்தது. செங்கல்பட்டில் இரண்டு இளைஞர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தகவல்தான் அது.

சட்டமன்றக் கூட்டம் நடந்து வருகிற இந்த நேரத்தில் இப்படி செய்துவிட்டார்களே என்று, ஐஜி டிஐஜி, எஸ் .பி மூவரும் ஆலோசனைகள் செய்துவிட்டு சுமார் 50 சிறப்பு போலீஸாரை அங்கே அனுப்பியதோடு… இன்ஸ்பெக்டர்களுக்கும் சில உத்தரவுகளை கொடுத்து தேடுதல் வேட்டைக்கு அனுப்பி வைத்தார் எஸ்பி.

ஜனவரி 6ஆம் தேதி இரவு சுமார் 8.30 மணியளவில் செங்கல்பட்டு கலைஞர் கருணாநிதி வீதியில் நின்றிருந்த அப்பு, கார்த்திக் இருவரை ஒரு கும்பல் ஒட ஒட விரட்டி விரட்டி வெட்டினார்கள். அதில் ஒருவர் வீதியிலேயே சாய்ந்து விட்டார். இன்னொருவர் பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள கார் ஸ்டேன்ட் அருகில் உள்ள டீ கடையில் தப்பிக்க முயற்சித்தபோது நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி சாய்த்தார்கள் கொலை வெறிபிடித்த மிருகங்கள்.

கொலை செய்த முக்கிய குற்றவாளிகள் மொய்தீன் மற்றும் தினேஷ் என்பதை உறுதி செய்த போலீஸார் அவர்கள் உருவப் படங்களையும் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸாருக்கும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் ஆறு இன்ஸ்பெக்டர்கள் தங்களது கை துப்பாக்கியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள்.

திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமாரும் அவர்களில் ஒருவர். இந்த வழியாகதான் அவர்கள் தப்பிக்க முடியும் அனைவரும் அலார்ட்டாக இருங்கள் என்று ரவிக்குமார் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர் சொன்ன அதே பகுதியில் வேகமாக டூவிலர்களில் சென்றனர் மொய்தீனும், தினேஷும். அந்த பகுதியில் இரண்டு பக்கமும் தப்பிக்க வழியுள்ளதை தெரிந்து அங்கேயும் போலீஸாரை மறைவாக நிற்க வைத்திருந்தார் இன்ஸ்பெக்டர்.

அதனால் தப்பிக்க முயன்ற கொலை வெறியர்களை கொத்தாகத் தூக்கி தனது வாகனத்தில் வைத்துக்கொண்டு, எஸ் பி அரவிந்தனுக்கு தகவல் கொடுத்தார் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார். அவர்கள்தானா என்று திரும்பத் திரும்பக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்ட எஸ்பி., உடனடியாக தனது உயர் அதிகாரிகளுக்கு தகவல்கள் தெரியப்படுத்திவிட்டு மேலிட முக்கிய உத்தரவுக்கு காத்திருந்தார். சில மணி நேரங்கள் பிறகு க்ரீன் சிக்னல் கிடைத்தது.

மேலிட உத்தரவு வரும் வரையில் கொலை வெறியர்களிடம் விசாரணை செய்து வந்தனர் இன்ஸ்பெக்டர் டீம். அவர்கள் கொடுத்த தகவல்கள் சட்டம் ஒழுங்கு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ரகம்.

“செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, திருக்கழுகுன்றம், காஞ்சிபுரம், திருவள்ளுர், தாம்பரம் போன்ற பகுதியில் உள்ள ரவுடிகள் பகலில் மக்கள் பார்வையில்தான் கொலை செய்வோம். இரட்டை கொலை செய்தால் சிறையிலும் வெளியிலும் ரேட்டிங் கூடும். எங்கள் ஒவ்வொரு ரவுடிகள் குரூப்க்கும் தனித்தனியாக வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்டதை கொடுப்போம். எங்களை காப்பாற்றுவார்கள். கேஸ் தீவிரமாக போனால் செட்டில்மென்ட் பேசுவோம். அதற்கு ஒத்துவரவில்லை என்றால் கதம் கதம்தான். மக்கள் முன்பு கொலை செய்வதுதான் ஒரு கெத்து” என்று அந்த இரு கொலை வெறியர்களும் ஏதோ சுய சரிதை சொல்வது போல பெருமிதப்பட்டு சொல்லியிருக்கிறார்கள். ஆனால் மேலிடத்தின் க்ரீன் சிக்னல் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

மூன்று இடங்களைத் தேர்வுசெய்து அதில் ஒரு இடத்தை முடிவுசெய்து… அந்த இடத்தில் அந்த இரட்டைக் கொலையர்களை இறக்கிவிட்டார் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார்.

‘இந்த நாட்டில் நல்லவர்களைப் பார்த்துதான் கெட்டவர்கள் பயப்படனும். ஒரு போதும் கெட்டவர்களைப் பார்த்து நல்லவர்கள் பயப்படக்கூடாது’ என்று சொல்லிக் கொண்டே இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், தனது இடுப்பிலிருந்த பிஸ்டல் எடுத்து லோடு செய்தார் அவ்வளவுதான் முடிந்தது. உடனே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு அந்த இடத்திலிருந்து புறப்பட்டது இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் டீம்.

யார் இந்த இன்ஸ்பெக்டர் ரவிக்குமார்?

இவர் 1999 பேட்ஜ் அதிகாரி. தற்போது டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபு, அமல்ராஜ், டாக்டர் செந்தில் வேலன், அஸ்ரா கார்க், பாலகிருஷ்ணன், சேவியர் தன்ராஜ், வருண் குமார், தேன்மொழி, அரவிந்தன் போன்ற ஐபிஎஸ் அதிகாரிகளிடம் சிறப்பாக பணி செய்தவர்.

இவரது காரில் எப்போதும் உணவுப் பொட்டலம் பிஸ்கட் பாக்கெட்டுகள் இருக்கும். போகும் வழியில் வறுமையில் பசியோடு இருப்பவர்களை பார்த்துவிட்டால் போதும். உடனே இறங்கிபோய் அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்குவார். அதேபோல் அவரது வாகனம் வந்துவிட்டால் நாய்கள் சூழ்ந்து கொண்டு கொஞ்சி குலாவும். அந்த அளவுக்கு நாய்களிடம் பாசமாக பழகி தினந்தோறும் ரவுன்ட்ஸ் போகும் போது பிரியாணி பிஸ்கட் போட்டு வருகிறார். இவ்வளவு பாசம் எல்லாம் நல்லவர்கள் மீது மட்டும்தான்.

2002இல் இ. சி. ஆர் சாலையில் உள்ள கடலூர் ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு, 2006இல் காசி தியேட்டரில் ரவுடி சூனாம்பேடு செந்தில் காலில் சுட்டது, சில மாதங்களுக்கு முன்பு திருவள்ளூரில் ஆகாஷ் என்ற ரவுடியின் காலில் சுட்டது என்று அதிரடி ஆசாமிகளுக்கு அதிரடியாகவே பதில் கூறியவர்” என்று சொல்கிறார்கள் செங்கல்பட்டு மாவட்ட போலீஸார்.

நாய்களுக்கு பிஸ்கட், ரவுடிகளுக்கு பிஸ்டல் என்பதுதான் இந்த இன்ஸ்பெக்டரின் ஸ்டைல்.

**-வணங்காமுடி**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *