மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 ஜன 2022

வேதா இல்லம் - பொதுப் பயன்பாடே இல்லை: நீதிமன்றம்!

வேதா இல்லம் - பொதுப் பயன்பாடே இல்லை: நீதிமன்றம்!

வேதா இல்லம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜனவரி 5) தள்ளுபடி செய்தது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை அதிமுக அரசு அரசுடைமையாக்கியது. இந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் கடந்த நவம்பர் 24ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதி சேஷசாயி, வேதா இல்லம் அரசுடைமையாக்கியது செல்லாது என்றும் வீட்டு சாவியை தீபக், தீபாஆகியோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா நினைவு இல்லம் அறக்கட்டளை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கில் நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், சக்திகுமார் சுகுமார குரூப் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

வேதா இல்லம், நிலம் கையகப்படுத்தப்பட்டதில் நடைமுறை தவறுகள் உள்ளதா? பொதுப் பயன்பாடு உள்ளதா? அப்படி பொதுப் பயன்பாடு இருந்தால் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை மீண்டும் தொடர அரசுக்கு உத்தரவிட முடியுமா? என்ற கேள்விகள் எழுந்ததாகக் கூறி அதற்குத் தீர்ப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

“நிலம் கையகப்படுத்தும் நடைமுறைகளை ஆய்வு செய்ததில், தனியார் சொத்து என்ற முறையில் அதன் உரிமையாளரின் கருத்தைக் கவனத்தில் கொள்ளாமல் அவர்களின் நிலையை ஏற்றுக் கொள்ளாமல் வேதா இல்லத்தைக் கையகப்படுத்தியதில் தவறு நடந்துள்ளது என்ற தனி நீதிபதி உத்தரவில் தவறில்லை” என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நிலம் கையகப்படுத்தப்பட்டதில் பொதுப் பயன்பாடு இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள்,

“உரிமையாளரின் விருப்பத்திற்கு முரணாகக் கையகப்படுத்தப்பட்டு உள்ளதால் தனி நீதிபதி உத்தரவில் தலையிட அவசியம் இல்லை” என்று தெரிவித்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தொடர்ந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

“தனி நீதிபதியின் உத்தரவை ஏற்று வாரிசு தாரர்களிடம் சாவி ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கும் படி அரசுக்கு உத்தரவிடுவது முறையாக இருக்காது. ஏற்கனவே நினைவிடம் உள்ள நிலையில் இரண்டாவது நினைவிடம் அமைக்க அரசுக்கு உத்தரவிடுவது சட்டப்பூர்வமாக இருக்காது. ஜெயலலிதாவுக்கு இரண்டாவது நினைவிடம் என்பது தேவையற்றது என்ற தனி நீதிபதியின் கருத்தில் தவறு இல்லை” என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

புதன் 5 ஜன 2022