மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 4 ஜன 2022

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள்?

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள்?

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்தினார்.

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் ஜனவரி 10ஆம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது தொடர்பாகத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், அடுத்துப் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

அப்போது, பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கும், கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும், பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்வையாளர்கள் இன்றி நடத்தவும் சுகாதாரத்துறை பரிந்துரை செய்திருப்பதாகத் தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுபோன்று இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா, வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கலாமா, கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

செவ்வாய் 4 ஜன 2022