மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜன 2022

தமிழ்நாட்டில் 100-ஐத் தாண்டிய ஒமிக்ரான் பாதிப்பு!

தமிழ்நாட்டில் 100-ஐத் தாண்டிய ஒமிக்ரான் பாதிப்பு!

தமிழ்நாட்டில் தற்போது மொத்தமாக 120 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மற்ற மாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டிலும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒமிக்ரான் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

இந்த நிலையில் நேற்று சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,”வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு வந்த 22 ஆயிரத்து 418 பேருக்கு பரிசோதனை நடத்தியதில் 232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் மரபணு மாற்றம் ஏற்பட்டு எஸ்-ஜீன் டிராப் 152 பேருக்கு கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டில் ஏற்கனவே 46 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் புதிதாக 74 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் 66 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்ற நிலையில், 54 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி மற்றும் கேரளாவில் இருந்து தமிழ்நாடு வந்த இரண்டு பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 5 பேர், சென்னையில் 95 பேர், மதுரையில் 4 பேர், திருவள்ளூரில் 3 பேர், கன்னியாகுமரி மற்றும் திருவண்ணாமலையில் தலா இரண்டு பேர், சேலம், திருவாரூர், கோயம்புத்தூர் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என 120 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுபோன்று நேற்று தமிழ்நாட்டில் புதிதாக 1,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் நேற்று மட்டும் 589 பேரும், செங்கல்பட்டில் 137 பேரும், கோவையில் 70 பேரும் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

சனி 1 ஜன 2022