மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜன 2022

கலைவாணர் அரங்கில் சட்டமன்றம்: மின்னம்பலம் செய்தியை உறுதிப்படுத்திய அறிவிப்பு!

கலைவாணர் அரங்கில் சட்டமன்றம்: மின்னம்பலம் செய்தியை உறுதிப்படுத்திய அறிவிப்பு!

தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் வரும் ஜனவரி 5 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதுபற்றி மின்னம்பலத்தில் நேற்று (டிசம்பர் 31) வெளியிட்ட செய்தியை இன்று சட்டமன்றச் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று மின்னம்பலத்தில் சட்டமன்றம் மீண்டும் கலைவாணர் அரங்கத்தில்? அமைச்சர் ஆய்வு என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதில், “ சபாநாயகர் அப்பாவு டிசம்பர் 13 ஆம் தேதி அறிவித்ததன் அடிப்படையில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டமன்ற வளாகத்தை செம்மைப்படுத்தும் பணிகள் கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடந்தன. இங்கே சட்டமன்றம் நடந்து ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டதால் தூய்மைப்படுத்தும் பணிகள், சோபா செட்டுகள் புதுப்பிப்புப் பணிகள் வேகமாக பொதுப்பணித்துறை சார்பில் நடந்தன. இந்த நிலையில் ஜனவரி 5 ஆம் தேதி சட்டமன்றம் தொடங்க செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கிட்டத்தட்ட ஏற்பாடுகள் முடிவுற்ற நிலையில்... தற்போது ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழலில் மத்திய அரசும் மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இதைக் கருத்தில் கொண்டு சட்டமன்றத்தை சமூக இடைவெளியோடு மீண்டும் கலைவாணர் அரங்கிலேயே கூட்டலாமா என்று முதல்வர் ஆலோசித்திருக்கிறார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவுடன் நடந்த இந்த ஆலோசனைக்குப் பிறகு இன்று (டிசம்பர் 31) மதியம், பிறகு மாலை என இருமுறை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலைவாணர் அரங்கத்துக்கு சென்று ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். கொரோனாவின் அடுத்த கட்டமான ஒமிக்ரான் பரவலால் கட்டுப்பாடுகள் அதிகரித்திருப்பதால் ஒருவேளை சட்டமன்றம் கலைவாணர் அரங்கத்திலேயே நடைபெறலாம் என்கிறார்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள்” என்று தெரிவித்திருந்தோம்.

அதன்படியே இன்று (ஜனவரி 1) சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ வரும் 5 ஆம் தேதி கூடும் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கலைவாணர் அரங்கில் நடைபெறும். கூட்டத் தொடர் தலைமைச் செயலக சட்டமன்றத்தில் நடைபெறும் என்ற அறிவிப்புக்கு பதிலாக இந்த அறிவிப்பு விடப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ஆரா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

சனி 1 ஜன 2022