மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜன 2022

இஸ்ரேலில் புதிய இரட்டைத் தொற்று நோய் கண்டுபிடிப்பு!

இஸ்ரேலில் புதிய இரட்டைத் தொற்று நோய் கண்டுபிடிப்பு!

கொரோனா மற்றும் இன்ப்ளூவென்சா இணைந்து ஏற்படுத்தும் இரட்டைத்தொற்று நோய் இஸ்ரேலில் முதன்முறையாக ஒரு நபருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 161 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 1,431 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 454 பேர், டெல்லியில் 351 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் புதிதாக 74 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. ஒமிக்ரான் பாதிப்பில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.

இப்படி புதிய திரிபு அதிவேகமாக பரவி வருவதால் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

நாம் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த முடிவெடுத்துள்ள நிலையில், இஸ்ரேல் நாட்டில் நான்காவது தடுப்பூசி செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிக தடுப்பூசி செலுத்தி மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்கும் இஸ்ரேல் நாட்டில் புதிய தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலில் டெல் அவைவ் நகரில் உள்ள ராபின் மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், கொரோனா தொற்றும், இன்ப்ளுவென்சா தொற்றும் இணைந்த ஒரு புதிய தொற்றை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த இரட்டை உருமாற்ற வைரஸூக்கு ஃப்ளோரினா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த கர்ப்பிணி பெண் எந்த தடுப்பூசியும் எடுத்துக் கொள்ளவில்லை என்று இஸ்ரேல் நாட்டின் செய்திதாளான நாளேடான யேதியோத் அஹ்ரோநோத் தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டு வைரஸ்கள் மனித உடலில் நுழைவதால், ஃப்ளோரோனா தொற்று, நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் அச்சப்படுகின்றனர்.

இதுகுறித்து கெய்ரோ பல்கலைக்கழக மருத்துவமனையின் மருத்துவர் நஹ்லா அப்தெல் வஹாப் கூறுகையில், “ ஃப்ளோரோனா வைரஸ் மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். ஏனென்றால் இரு வைரஸ்கள் மனிதர்களை ஒரே நேரத்தில் தாக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி திறன் கடுமையாக பாதிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

ஃபளோரோனா தொற்று நோய் குறித்து ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இஸ்ரேலில் தற்போது 22,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 90க்கும் மேற்பட்டோர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் நாட்டில் 8,243 பேர் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக ஐரோப்பா நாடுகளில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் இரண்டும் சேர்ந்த கலவையான டெல்மைக்ரான் எனும் தொற்று அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

சனி 1 ஜன 2022