மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜன 2022

புத்தாண்டு தரிசனம்: கூட்ட நெரிசலில் 12 பேர் பலி!

புத்தாண்டு தரிசனம்: கூட்ட நெரிசலில் 12 பேர் பலி!

ஜம்மு-காஷ்மீரில் மாதா வைஷ்ணோ தேவி கோயிலில் புத்தாண்டு தரிசனத்தை முன்னிட்டு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நிவாரணம் அறிவித்துள்ளன.

ஜம்மு-காஷ்மீரின் கத்ரா நகரில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோயில் புகழ் பெற்றது. இது கத்ராவின் திரிகுடா மலைதொடரின் மேல் 1700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஜம்முவில் இருந்து 46 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோயில் ஒரு குகை கோயிலாகும். நாடு முழுவதும் இருந்து சுமார் 8 மில்லியன் பக்தர்கள் ஆண்டுதோறும் வைஷ்ணோ தேவி கோயிலுக்கு வருகை தருவது வழக்கம். ஆந்திர பிரதேசத்தின் திருமலை வெங்கடேஸ்வரர் கோயிலுக்கு அடுத்தப்படியாக நாட்டின் இரண்டாவது மிக பெரிய அளவில் பக்தர்கள் வருகை தரும் கோயில் என்ற பெருமைக்குரியது.

இந்த நிலையில் புத்தாண்டு தினத்தையொட்டி இன்று(ஜனவரி-1,2022) வைஷ்ணோ தேவி கோயிலில் தரிசனம் செய்வதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை 2.45 மணியளவில் சாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தபோது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 பேர் உயிரிழந்தனர். இதில் காயமடைந்த இருபதுக்கும் மேற்பட்டோர் மாதா வைஷ்ணோ தேவி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேரின் உடல்நிலை மோசமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக உள்துறை முதன்மைச் செயலாளர், ஜம்மு மண்டல ஏடிஜிபி மற்றும் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோயில் வாரிய ஆணையர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட இந்த சோக சம்பவத்திற்கு, குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசு சார்பில், கோயில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிர ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதனிடையே, காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, மொத்தமாக ரூ.12 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான முதல்கட்ட தகவலில், தரினசத்தின்போது வரிசையில் நின்று கொண்டிருந்த இரு பிரிவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பக்தர்கள் ஒருவரை ஒருவர் இடித்து தள்ளியுள்ளனர். இதனால் உயிரிழப்பு ஏற்பட்டாக கூறப்படுகிறது.

-வினிதா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

சனி 1 ஜன 2022