மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 26 டிச 2021

தைப்புத்தாண்டு: முதல்வர் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் ஆளுநர்?

தைப்புத்தாண்டு:  முதல்வர் முயற்சிக்கு முட்டுக்கட்டை  போடும் ஆளுநர்?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கவிருந்த முயற்சிக்குத் தமிழக ஆளுநர் முட்டுக் கட்டை போட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி 2006-2011இல் ஆட்சியிலிருந்தபோது தமிழ் வருடப்பிறப்பு சித்திரை முதல் தேதி என்பதை... தமிழறிஞர்களின் கூற்றை ஏற்று மாற்றி தை 1 தமிழ் வருட பிறப்பாக அறிவித்தார். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, கருணாநிதி போட்ட உத்தரவை மாற்றி தமிழ் வருடப்பிறப்பு சித்திரை 1தான் தமிழ் வருடப்பிறப்பு என்று அறிவித்துவிட்டார்.

தந்தை கருணாநிதி கனவைச் செயல்படுத்தும் வகையில், புதியதாகப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த டிசம்பர் 17ஆம் தேதி, மூத்த அமைச்சர் துரைமுருகனை அழைத்து, தை முதல் தேதியைப் புத்தாண்டாக அறிவிக்க ஒப்புதல் கோரும் மனு ஒன்றை அவரிடம் கொடுத்து அன்று மாலையை கவர்னரை சந்திக்கச் சொன்னார் முதல்வர்.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறையிலிருந்து வெளியில் வந்த துரைமுருகன் தனது உதவியாளரிடம், “ இன்று மாலை கவர்னரை சந்திக்கவேண்டும்” என்று சொல்லிவிட்டு மதியம் உணவுக்குச் சென்றுவிட்டார்.

மாலை. 5.00 மணிக்கு மேல் அமைச்சர் துரைமுருகன், ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து முதல்வர் கொடுத்த மனுவைக் கொடுத்துப் பேசினார். அதையடுத்து நேராக முதல்வரை சந்தித்து ஆளுநருடன் நடந்த சந்திப்பு பற்றிப் பேசினார். அதன் பிறகு பொங்கலுக்குத் தமிழக மக்களுக்கு கொடுக்கப்போகும் பரிசு பொருட்களை வழங்கும் பையில் தை1 தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்றும் அச்சடிக்கப்பட்டது.

இந்நிலையில்... தை 1ஐ தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க முதல்வர் கொடுத்து அனுப்பிய கடிதத்தின் மீது கவர்னர் ஆர்.என்.ரவி ஆர்வம் காட்டாமல் கிடப்பில் போட்டுள்ளதாகச் சொல்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில்.

முதல்வர் பொங்கல் பரிசு வழங்கும்போது தை 1 தமிழ் புத்தாண்டாக அறிவிப்பாரா என்றும், ஜனவரி 5 ஆம் தேதி சட்டமன்றத்தின் ஆளுநர் உரையில் தமிழ் புத்தாண்டு தை என்ற அறிவிப்பு இடம்பெறுமா என்றும் எதிர்பார்ப்பு தற்போது நிலவி வருகிறது.

-வணங்காமுடி

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

ஞாயிறு 26 டிச 2021