மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 5 டிச 2021

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

காங்கிரஸை ஒதுக்கி வைத்துவிட்டு பாஜகவுக்கு எதிரான அணி அமைக்க மம்தா பானர்ஜி முயற்சி செய்வது பாஜகவை வலுப்படுத்துவதற்கு ஒப்பானதாகும் என்று சிவசேனா கூறியிருக்கிறது.

அண்மையில் மும்பை வந்து சரத் பவாரைச் சந்தித்த மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், “இப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற ஒரு கூட்டணி இருக்கிறதா என்ன?” என்று கேட்டிருந்தார். காங்கிரஸையும் கடுமையாக சாடியிருந்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் மம்தாவுக்குப் பதிலடி கொடுத்திருந்தார்கள்.

இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 4) சிவசேனாவின் அதிகாரபூர்வமான இதழான சாம்னா தனது தலையங்கம் மூலம் மம்தாவுக்கு பதில் கொடுத்துள்ளது.

அதில், “ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு இணையாக ஓர் எதிர்க்கட்சி குழுவை உருவாக்குவது பிஜேபி மற்றும் பாசிச சக்திகளை வலுப்படுத்துவதற்கு ஒப்பானதாகும். பாஜகவை எதிர்த்துப் போராடுபவர்கள்கூட காங்கிரஸை இல்லாது செய்துவிட வேண்டும் என்று நினைத்தால், இந்த அணுகுமுறைதான் பெரிய அச்சுறுத்தல். எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்றால், ஆளும் பாஜகவுக்கு மாற்றாக அரசியல் கட்சியை உருவாக்கும் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும்.

மேற்கு வங்கத்தில் இருந்து காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பாஜகவை மம்தா முடித்தார் என்பது உண்மைதான். ஆனால், காங்கிரஸை தேசிய அரசியலில் இருந்து ஒதுக்கி வைப்பது தற்போதைய பாசிச சக்திகளை வலுப்படுத்துவதாக அமையும். மோடியும் அவரது பாஜகவும் காங்கிரஸை அழிக்க வேண்டும் என்று நினைப்பது புரிந்துகொள்ளத்தக்கது. இது அவர்களின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி. ஆனால், மோடி மற்றும் அவரது சித்தாந்தங்களுக்கு எதிராகப் போராடுபவர்கள்கூட காங்கிரஸை அழிக்க வேண்டும் என்று நினைப்பதுதான் மிகவும் ஆபத்தான அச்சுறுத்தல்” என்று கூறியுள்ளது சிவசேனா.

-வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

ஞாயிறு 5 டிச 2021