மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 டிச 2021

அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்!

அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்!

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் 4 மணி நேர விவாதத்துக்குப் பின்னர் அணை பாதுகாப்பு மசோதா 2019 மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

பல்வேறு மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கும் அணை பாதுகாப்பு மசோதா கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், குளிர்கால கால கூட்டத்தொடரின் 4 ஆம் நாளான நேற்று இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அணை பாதுகாப்பு மசோதா 2019-ஐ நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும், அதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தன. இந்த மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும் மாநிலங்களின் உரிமைகளை மீறுகிறது என்றும் தெரிவித்தனர்.

திருச்சி சிவா எம்.பி இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், இந்தியா மாநிலங்களின் ஒன்றியம். நமது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் தனிச்சிறப்பு என்னவென்றால், அது கூட்டாட்சி முறையில் செயல்படுகிறது. அணை பாதுகாப்பு மசோதாவில் கண்காணிப்பு, சோதனை, செயல் முறை, பராமரிப்பு ஆகியவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போதைய அரசு கொண்டு வரும் பெரும்பாலான மசோதாக்கள் மாநில உரிமைகளை மீறுவதாக உள்ளது. இந்த மசோதாவும் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது. மாநிலங்களின் அதிகாரங்களை அத்துமீறிப் பறிக்க முடியாது” என்று தெரிவித்தார்.

அதுபோன்று பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவின் எம்.பி.நவநீதிகிருஷ்ணன், மதிமுக எம்,பி.வைகோ உள்ளிட்டோரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

4 மணி நேர விவாதத்துக்குப் பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் அணை பாதுகாப்பு மசோதா 2019 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வெள்ளி 3 டிச 2021