Oதக்காளி விலை குறைவது எப்போது?

politics

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தக்காளி வரத்து பாதிக்கப்பட்டு விலை கடுமையாக உயர்ந்தது. கடந்த 4 நாட்களாக 1 கிலோ தக்காளி 140 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 50தாக குறைந்துள்ளது. எனினும், சாமானிய மக்களுக்கு இந்த விலையும் அதிகமே. இதனால் எப்போது தக்காளி விலை குறையும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 63 சதவிகிதம் தக்காளி விலை உயர்ந்துள்ளாதாக மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “வட இந்திய மாநிலங்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெய்த கனமழையின் காரணமாகவும் தக்காளி பயிர் மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டன. இதனால் 2021 செப்டம்பர் இறுதியிலிருந்து தக்காளியின் விலை உயர்ந்து வருகிறது.

2021 நவம்பர் 25 நிலவரப்படி, தக்காளியின் அகில இந்தியச் சராசரி விலை கிலோவுக்கு ரூ 67 ஆகும். இது கடந்த ஆண்டை விட 63சதவிகிதம் அதிகம். விநியோக சங்கிலியில் ஏற்படும் சிறிய இடையூறுகள் அல்லது கனமழை காரணமாகச் சேதம் ஏற்படுவதால் விலை ஏற்றம் ஏற்படுகிறது.

வட இந்திய மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து டிசம்பர் மாத ஆரம்பத்திலேயே தொடங்கும். இதன் காரணமாக வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். டிசம்பரில் தக்காளி வரத்து கடந்த வருடத்தைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெங்காயத்தைப் பொறுத்தவரை, அக்டோபர் முதல் விலை உயர்வு கணிசமாகக் குறைந்துள்ளது, மேலும் 2020 மற்றும் 2019-ல் இருந்த சில்லறை விலையை விடக் குறைவாக உள்ளது. 2021 நவம்பர் 25 அன்று வெங்காயத்தின் அகில இந்தியச் சராசரி சில்லறை விலை கிலோவுக்கு ரூ. 39 ஆகும். இது கடந்த ஆண்டை விட 32 சதவிகிதம் குறைவு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *