மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 நவ 2021

வானதி சீனிவாசன் விடுதலை!

வானதி சீனிவாசன் விடுதலை!

அதிமுக - பாஜக இடையே ஏற்பட்ட மோதல் வழக்கில் வானதி சீனிவாசன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2016 சட்டமன்ற தேர்தலின் போது கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் அம்மன் அர்ஜுனன் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரம் முடிந்த பிறகு வானதி சீனிவாசன் கடைவீதி பகுதியிலுள்ள கோயிலுக்குச் சென்றார்.

அப்போது பாஜகவுக்கும் அதிமுகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் ஆதி நாராயணன் உட்பட அதிமுக நிர்வாகிகள் வானதி சீனிவாசனை முற்றுகையிட்டு பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டு கைகலப்பு ஏற்பட்டது. இந்த சூழலில் பாஜகவினர் தன்னை தாக்கியதாகக் கூறி அதிமுகவைச் சேர்ந்த ஆதிநாராயணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதையடுத்து வானதி சீனிவாசன் உட்பட 7 பேர் மீது பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கோவை 5ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி வானதி ஸ்ரீனிவாசன் விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.

இந்நிலையில் இவ்வழக்கில் இன்று (நவம்பர் 26) தீர்ப்பு வெளியானது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வானதி சீனிவாசன், கண்மணி பாபு, மோகனா, குணசேகரன், நாகராஜ் சண்முகசுந்தரம், மற்றும் பாபு உட்பட 7 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

-பிரியா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

வெள்ளி 26 நவ 2021