மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 நவ 2021

தியேட்டரில் ஜெய்பீம்: கண்டுரசித்த நல்லக்கண்ணு

தியேட்டரில் ஜெய்பீம்: கண்டுரசித்த நல்லக்கண்ணு

தமிழகத்தில் 1990களில் நடந்த பல்வேறு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு காண்போரின் சிந்தனையை தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் 'ஜெய் பீம்'.

நீதிபதி சந்துருவின் வழக்காடு பயணத்தில் இருந்து நிறையவே ஈர்க்கப்பட்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வழக்கறிஞராக, நீதிபதியாக நீதியரசர் சந்துரு தனது கடமையைச் செய்ய, நீதியை நிலைநாட்ட தன் எல்லைகளைத் தாண்டியும் எப்படிப் போராடினார் என்பதற்கான சாட்சி 'ஜெய் பீம்'.

இத்திரைப்படத்தை த.செ.ஞானவேல் எழுதி, இயக்கியுள்ளார். படத்தில் சூர்யாவுடன், பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நவம்பர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பிராந்தியங்களில் வெளியான 'ஜெய் பீம்' திரைப்படம் பரவலாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினரும் படத்திற்கு பாராட்டும், படக்குழுவினருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

இந்தப் படம் தமிழ் சினிமா, மற்றும் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தையும் அதிர்வலைகளையும், விவாதத்தையும். ஏற்படுத்தியது. ஜெய்பீம் வெளியான பின் அதற்கு எதிராக பாமக தரப்பில் கடுமையான விமர்சனங்கள் இன்றுவரை முன்வைக்கப்பட்டு வருகின்றன. நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட படங்களை திரையரங்குகளில் வெளியிடக் கூடாது என பாமக மாவட்ட செயலாளர்கள் அந்தந்த மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்களுக்கு கடிதம் அனுப்பி வருகின்றனர்.

சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது பெரும்பான்மையான மாவட்ட நீதிமன்றங்களில் வன்னிய அமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் வழக்குக்கு பயந்து நடிகர் சூர்யா குடும்பத்துடன் துபாய் சென்றுவிட்டார் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்த நிலையில் ஜெய்பீம் படத்தை தொலைக்காட்சியில் பார்த்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

அதற்கேற்ப படத்தை சென்னையில் உள்ள என்.எப்.டி. சி திரையரங்கில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று (25.11.2021) வியாழக்கிழமை இரவு நல்லகண்ணு படத்தைத் திரையில் கண்டு ரசித்தார்.

அவருடன் நடிகர் சூர்யா, சூர்யாவின் தந்தை சிவக்குமார், இயக்குநர் த.செ.ஞானவேலு, 2D நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் ஆகியோரும் பார்த்தனர்.

படத்தைப் பார்த்துவிட்டு நல்லக்கண்ணு, நடிகர் சூர்யாவையும், படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேலுவையும் வெகுவாகப் பாராட்டினார். நடிகர் சூர்யாவின் கன்னத்தில் செல்லமாக வருடிக் கொடுத்து தனது பாராட்டை நல்லக்கண்ணு பதிவு செய்தார்.

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரின் பாராட்டு, நடிகர் சூர்யாவையும் ஜெய்பீம் படக்குழுவினரையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

-அம்பலவாணன்

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

வெள்ளி 26 நவ 2021